சாமந்தி(Yellow Marigold)

தோட்டத்திற்கு அழகு தருவதில் முதன்மையான பூச்செடி என்றால் அது சாமந்தி தான்.இந்த செடி நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.இந்த செடிக்கு போதுமான சூரிய வெளிச்சமும், தண்ணீரும் இருந்தால் நன்கு செழிப்பாக வளரும்.

நடவு முறை
இது நாற்று விட்டு நாடும் முறை சிறந்தது.

உங்கள் வீட்டில் காய்ந்த பூ இருந்தால் போதும்.இதன் விதைக்காக அலைய வேண்டாம்.

காய்ந்த பூவை பிரித்து ஒரு சின்ன தொட்டியில் போட்டு சிறிது மண்ணை போட்டு மூடி தண்ணீர் தெளிக்கவும். அல்லது குழித்தட்டு முறையில் தென்னை நார்க் கழிவை பயன்படுத்தி நாற்றுகள் தயாரித்து கொள்ளலாம்.

எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.. தண்ணீர் தேங்கி நிற்க கூடாது.சிலர், நாற்­று­களை வாங்­கியும் நடவு செய்­கின்­றனர். ஒரு­நாற்று, 2.60 பைசா­விற்கு விற்­பனை செய்­கின்­றனர்.
ஒரு வாரத்தில் முளைத்து வரும்.நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு வேர்ப்பாகம் அமைனத்தும் மறையும்படி நடுதல்வேண்டும்.
நாற்று நடவு செய்த பின், வாரம் ஒரு­முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.வெயில் நாட்­களில், செடி­களில் அரும்­புகள் அதி­­மாக காணப்­படும்

நீர் நிர்வாகம்
நடுவதற்கு முன்னர் ஒரு தண்ணீர் நட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர் ஒரு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்கவேண்டும். நீர்த்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு சாமந்தி ஒரு வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். செடிகள் நீண்ட இரவு மற்றும் குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும்.

நடவு செய்த 40 நாட்களில் அரும்புகள் உருவாகி பூக்கள் உற்பத்தியாகக் கூடியது  சாமந்தி பூ.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.