புடலை

புடலை சாகுபடி

புடலை கொடி வகையை சார்ந்தது,மாடி தோட்டத்தில் வைக்கலம்.தரையிலும் வைக்கலாம்.

வேலிகளில் ஏற்றிவிடலாம்,சாம்பார்,கூட்டு,பொரியல் செய்து சாபிடலாம்.

நாற்றுகளை நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை ஊடகமாக பயன்படுத்தி குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்.ஒரு குழிக்கு ஒரு விதை என்ற கணக்கில் விதைத்து தினமும் காலை மாலை இருவேலையும் நீர் பாய்ச்ச வேண்டும். சுமார் 12 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்தலாம்.

நடவிற்கு முன் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும்.

நாற்றுகளை 60 செ. மீ இடைவெளியில் உள்ள துளைகளில் நட வேண்டும்.

கரையும் உரப்பாசனம் இட வேண்டும்.

நாற்றிழைகள் வளர ஆரம்பித்தவுடன் குச்சிகள் மூலம் பந்தல் அமைத்து கொடிகளை எடுத்து கட்டி படரவிட வேண்டும். 2 முதல் 3 முறைகள் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்
4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் விட்டுத்தான் அறுவடை செய்ய வேண்டும்.  காய் அறுவடை செய்த பின் மறு நாளே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

அறுவடை
விதைத்த 65-70 ஆம் நாள் முதல் அறுவடை ஆரம்பமாகும். நன்கு வளர்ச்சியடைந்த காய்களை 5-7 நாட்கள் இடைவெளியில் 8-10 அறுவடைகள் செய்யலாம்.

நோய் தாக்குதல் மற்றும் உருமாற்றம் உடைய காய்களை தனியே பிரித்து தரம் பிரிக்க வேண்டும்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..

                


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.