கொடி அரும்பு

கிராமத்தில் வீட்டின் வாசலில் இந்த கொடியை பார்க்கலாம்.நன்கு மனம் வீசும் மலர்களை கொண்டது. பதியம் போட்டு நடலாம்.
அடியுரம்
ஆட்டு எரு ஒரு செடிக்கு 5 கிலோ அல்லது வண்டல் மண் 10  கிலோ போடலாம். அல்லது மண்புழு உரம் போட வேண்டும்.
நீர் நிர்வாகம்
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை).
உரநிர்வாகம்
முதல் உரமாக கடலை புண்ணாக்கை செடிக்கு அரை அடி தள்ளி போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
மேலுரம்
கடலைப்புண்ணாக்கு செடிக்கு அரை அடி தள்ளி இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
சுருட்டை நோய் தாக்குதல்;
சுருட்டை நோய் தாக்குதலின்  அறிகுறி  செடியின் இலை சுருண்டு   செடி வெளுத்தும் காணப்படும். 
கட்டுப்படுத்தும் முறை 
சல்பர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வேர்அழுகல் தாக்குதல்
செடி நுனியில் இருந்து காய்ந்து வரும்.  அந்தச் செடியைப் பிடுங்கிப் பார்த்தால்  வேர் அழுகி செடி பட்டுக் காணப்படும். வேர்பட்டை கையில் பிடித்தால் உருவினால் வந்துவிடும் 
                கட்டுப்படுத்தும் முறை 
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி தண்ணீரில் கரைத்து வயலில் ஈரம் இருக்கும்  வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.  ஒரு செடிக்கு 250 கிராம் வேப்பம்  புண்ணாக்கு  இட்டு கட்டுப்படுத்தலாம்.
அறுவடைத் தொழில்
தினமும் காலையில் நன்கு பருத்த பூக்களை பறிக்க வேண்டும்.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.