செம்பருத்தி

செம்பருத்தி செடி









தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி  சரியானதாக இருக்கும்.

சுமார் 40 வகையான செம்பருத்தி கன்றுகள் உள்ளன. செம்பருத்தியை ஏழைகளின் ரோஜா என்று சொல்வார்கள். ரோஜா செடிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ரோஜாவை ஒரு குழந்தையை வளர்ப்பது போல வளர்க்கவேண்டும். பூ பூத்த இரண்டாம் நாள் கொட்டி விடும். பூச்சிகளும் எளிதாகத் தாக்கும். ஆனால், செம்பருத்தியில் இந்தப் பிரச்னை கிடையாது. எங்கு வேண்டுமானாலும் வளரும். ஒரு வாரம் வரைகூட செடியிலேயே உதிராமல் இருக்கும். ரோஜாவை மிஞ்சும் வகையில் அழகானப் பூக்கள் செம்பருத்தியில் உள்ளன. 

செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது  மிகவும் ஈஸியானது. அனைவருக்கும் செம்பருத்தியில் உள்ள வெரைட்டிகள் தெரியுமோ இல்லையோஆனால் அந்த செம்பருத்தி கண்ணைப் பறிக்கக்கூடிய வகையில் பல்வேறு நிறங்களில் உள்ளது.மேலும் அவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லாமல், சில செம்பருத்தி பூக்கள் வடிவம் மற்றும் அளவுகளில் மாறுபட்டிருக்கும்.

குறிப்பாக இந்த செம்பருத்தி செடியில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால், அந்த பூவானது செடியின் இலைகளை பல்வேறு காலங்களில் ஒரே மாதிரி வைத்திருக்கும்

உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தரவல்லது. ஓரடுக்கு பலஅடுக்கு நேர்த்தியில்  கவர்ச்சியான இதழ்களை உடையது.

சாதாரண தண்ணீர் கேன் தொட்டிகளில் வளர்க்கலாம்.

பலன்கள்: 

செம்பருத்திப் பூவில் இரும்புச்சத்துக்கள் மிக அதிகம். ஃப்ரெஷ்ஷான பூவாக அப்படியே எடுத்துக் கழுவிச் சாப்பிடலாம். மாதவிலக்குப் பிரச்னைகள் குணமாகும். ரத்தப்போக்கு சீராகும். இதயத்துக்கு மிகவும் நல்லது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பவர்கள், செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டுவர, நல்ல பலன்களைத் தரும். குழந்தைகளுக்கு, செம்பருத்தி பூவின் சாற்றை வெல்லத்தோடு கலந்து தந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் செம்பருத்தி வகைகளுக்கு இந்த >>லிங்க் கிளிக்<< செய்து பார்க்கவும்...

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.