கொத்தவரங்காய் வற்றல்

கொத்தவரங்காய் வற்றல்
தேவையானவை: 
கொத்தவரங்காய் - அரை கிலோ,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
நல்ல கொத்த வரங்காய்களாக தேர்வு செய்து... அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி, நீரை நன்றாக வடித்துவிட்டு, வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும் (அதாவது உடைக்கும் பதம் வரும் வரை). பிறகு, எடுத்து பத்திரப்படுத்தவும்.

இதை எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். குழம்பிலும் சேர்க்கலாம்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..
        

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.