முள்ளங்கி

முள்ளங்கி
முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும்.

கிழங்குகள் இசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும்.

இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது.

மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

பார்களின் அல்லது தொட்டியில் உச்சியிலும் 3-4 விதை வரை ஊன்றி முளைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.

வகைகள் 
வெள்ளை முள்ளங்கி,
சிவப்பு முள்ளங்கி,
மஞ்சள் முள்ளங்கி.

முள்ளங்கியின் பயன்கள்
முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி,சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.

மஞ்சள் முள்ளங்கி
மஞ்சள் முள்ளங்கியை காரட் என்ற பெயரில் புகழ் அடைந்துள்ள ஒரு கிழங்கு வகை காய்.இதை கழுவி சமைக்காமலேயே சாப்பிடலாம்.

தினம் ஒரு காரட் சாப்பிட்டால் கண் மருத்துவரிடம் செல்லும் நிலை ஏற்படாது. இது மூளைக்கு நல்லது , தலை சுற்றல், மயக்கம் முதலியவற்றைத் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

சித்த பிரம்மையை போக்கும் வல்லமையுடையது. மூட்டு வலியை போக்கும், வாயுத்தொல்லை மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க கூடியது.

சிவப்பு முள்ளங்கி
சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப் படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும். வயிற்று பூச்சிகளை அழிக்கும் , சீரணத்தை எளிதாக்கும், மூலநோய்,வெள்ளை நோய் , பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும்.

கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும். வயிற்று புண்களை குணப்படுத்தக் கூடியது.உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல்வறட்சி முதலியவற்றை போக்க கூடியது.

தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது. சிறு குழந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.

வெள்ளை முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கி சிறுநீரை ஒழுங்குப்படுத்தும், மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர்சுருக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும்,

சீதபேதியை கட்டுப்படுத்தும். எலும்புக்கு பலம் சேர்க்கும்.மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது.

வாத நோய்க்காரர்கள் குறைவாக உண்ணலாம். மாதவிடாய் காலங்களில் உண்டால் மாதவிலக்கு அதிகமாகும் இக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.