சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்...

மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது...வளர வளர பார்க்க அழகாக இருக்கும்...

வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம்.(அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது).

நீர் நிர்வாகம்

நடவு தண்ணீர் மற்றும் 3ம் நாள் உயிர் தண்ணீர் விடவேண்டும்.  பிறகு 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும். அறுவடைக்கு 15 தினங்களுக்கு முன்னால் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இதன் அறுவடை காலம் 85 - 90 நாட்களில் தயாராகி விடும்.

சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அறிந்து பொரியல் செய்து சாப்பிடலாம்...உடம்பிற்கு அவ்வளவு நல்லது...


   மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.