கனகம்பரம்

கனகாம்பரம்

இரகங்கள்: 
சிகப்பு, ஆரஞ்சு மற்றும் டெல்லி கனகாம்பரம்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
 நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்து வண்டல மண் மற்றும் செம்மண் ஏற்றது. கனகாம்பரம் செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும்.

பருவம் : 
ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மழைக்காலத்தில் நடக்கூடாது.மழையில் பூக்கள் நனைந்தால் வீணாகிவிடும்.

இடைவெளி : 
விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60 x 60 செ.மீ இடைவெளியை பின்பற்றவும். டெல்லி கனகாம்பரம் இரகத்திற்கு 60 x 40 செ.மீ.

நாற்றாங்கால் தயாரித்தல் :
தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அல்லது குழித்தட்டில் அமைத்து அவ்றறில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்சவேண்டும். விதைகள் விதைத்த 60ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.

மஞ்சள் கனகம்புரதிற்கு விதைகள் கிடையாது.அதன் கிளைகளை உடைத்து பதியம் போட்டுதான் நடமுடியும்.

நடவு செய்தல் : 
60 நாட்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 செ.மீ இடைவெளியில் தொட்டிகளில் நடவு  செய்யவேண்டும்

நீர் நிர்வாகம்
ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்சவேண்டும். நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் தோன்றக்கூடும். எனவே சீராக நீாப்பாய்ச்சவேண்டும்.

விதை சேர்த்தல்:
பூவை பறிக்காமல் இருந்தால், அதில் விதை வரும். அதை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து, ஒரு சிறிய பேப்பர்ரில் அது என்ன விதை என்று எழுதி செலோ டேப்பால் ஓட்டிக்கொள்ளவும் நண்பர்களே. இதை செய்தால் விதைகாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது நண்பர்களே. 


   மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.