மரவள்ளி

மரவள்ளி

மரவள்ளி வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம். சிறந்த வேலி பயிராக வரிசையாக  நடலாம்.

கிழங்கு வந்த, நன்கு வளர்ந்த குச்சியை கால் அடி வெட்டி நேர்புரமாக நடவேண்டும்.(தலை கீழாக நடவு செய்தல் கூடாது)

இடைவெளி
வரிசைக்கு வரிசை 3 அடி, செடிக்கு செடி 2 அடி

நீர் நிர்வாகம்
10 நாட்களுக்கு ஒரு முறை 

மாவுப்பூச்சி தாக்குதல்
மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறி  
இலையின் அடியில் வெள்ளை நிறத்தில பஞ்சுபோல் கூட்டம் கூட்டமாக இருக்கும் இவை இலையின் சாற்றை ஊறிஞ்சி இலைகளை கருப்பு நிறத்தில்  மாற்றிவிடும் வளர்ச்சி குறைவாகும் மகசூல் பாதிக்கும்.இது கோடைகாலங்களில் அதிகமாக தென்படும்.
   
கட்டுப்படுத்தும் முறை 
மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நாட்டு ரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், நோய்கள் வருவதில்லை. அதேபோல, பூச்சிகளும் தாக்குவதில்லை. ஆனால், எலிகள் தொந்தரவு இருக்கலாம். அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து எலிகளை விரட்ட வேண்டும்.10-ம் மாதத்தில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகி விடும். ஒரு செடியைப் பிடுங்கி வளர்ச்சியைத் தெரிந்துகொண்டு அறுவடையை ஆரம்பிக்கலாம்.

பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கி செடிகளைப் பிடுங்கி எடுக்க வேண்டும். உடனே கிழங்குகளை மட்டும் வெட்டி, நிழலான இடத்தில் குவித்து,

இலைகளை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். குச்சிகளை சீராக வெட்டி, சேமித்து வைத்து அடுத்த போகத்துக்கு நடவு செய்ய பயன் படுத்தலாம்.

 ‘மரவள்ளியில் முள்ளுவாடிஎன்கிற நாட்டு ரகம் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மாவுச்சத்துக்கள் அதிகம் உள்ள இதை பயிர் செய்த 8-ம் மாத்தில் அறுவடை செய்யலாம். இனிப்புத் தன்மை கொண்ட இதை முற்ற விட்டால், சுவை மாறி விடும்.

கோ-2, குங்குமரோஸ், என்கிற ரகங்களும் உண்டு. இவை 7-ம் மாதமே அறுவடைக்கு வந்துவிடும்.மரவள்ளிச் செடியின் குச்சிகளை நடவு செய்யும் முன்பாக பீஜாமிர்தக் கரைசலில் 2 மணி நேரம் ஊற வைத்து, விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால், வேர் சம்பந்தமான எந்த நோயும் தாக்குவதில்லை. பயிரின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். ரசாயன உரங்களுக்குப் பதிலாக, ஜீவாமிர்தக் கரைசலைப் பயன்படுத்த வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணை வளப்படுத்தும். அதனால், பயிர்கள் நன்கு வளரும். நிலத்துக்கு மண்புழுக்களை வரவழைக்கும்.

பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் 1 லிட்டர் தண்ணீருக்கு கால் லிட்டர் பிரம்மாஸ்திரக் கரைசல், 30 மில்லி மாட்டுச் சிறுநீர் என்று கலக்கித் தெளித்து பூச்சிகளை விரட்டலாம். விதைப்புக்கு முன்பாக அடியுரமாக ஆட்டு எருவைப் பயன்படுத்தும்போது, மரவள்ளியில் நல்ல மகசூல் கிடைக்கும்.

எலிகளை விரட்டும் வரி ஊமத்தங்காய்!

விஷம் வைக்கிறப்போ அது விளைபொருள்லயும் பரவுறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால, விஷத்தைத் தவிர்க்கிறது நல்லது. புதர்கள்ல,  வேலிகள்ல கிரிக்கெட் பந்து அளவுல பச்சை நிறத்துல வெள்ளை வரிகள் ஓடுற காய்கள் காய்ச்சுக் கிடக்கும். இதுக்குப் பேரு வரி ஊமத்தங்காய். இது ரொம்ப கசப்புத்தன்மை கொண்டது. இந்தக் காய்களைப் பறிச்சு ரெண்டா வெட்டிஅதுக்குள்ள எலிக்குப் பிடிச்ச தின்பண்டத்தை வெச்சுட்டா ஆர்வமுடன் வர்ற எலிகள் அதை சாப்பிடும். அந்த கசப்புத்தன்மையைத் தாங்க முடியாம ஒரு நாள் முழுசும் எலிகள் அலையும். அப்பறம் அந்த ஏரியா பக்கமே எலிகள் வராது


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.