மிளகாய்

.மிளகாய்:
மிளகாயை வீட்டில் வளர்க்க செம்மண் நிரம்பிய ஒரு தொட்டியில் மண்ணைக் கிளறிவிட்டு காய்ந்த மிளகாய் விதைகளைத் தூவ வேண்டும்.

பின்பு நீர் ஊற்ற வேண்டும். சாணத்தை அதன் மேற்பரப்பில் இட்டால் இவை வளர நன்கு உரம் கிடைக்கும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விதையாக இருக்கும் போது நீர் ஊற்ற வேண்டும்.
30 நாளில் மிளகாய்ச் செடி வளர்ந்து விடும்.

பின் வாரம் ஒரு முறை நீர் ஊற்றினால் போதுமானது.

40 வது நாளில் மிளகாய் பறிக்கலாம். தொடர்ந்து ஆறு மாதம் வரை கூட பறிக்கலாம்.

மிளகாயில் நிறைய வகைகள் இருக்கிறது.மேலும் விவரங்களுக்கு படத்தை பார்க்கவும்.

மருத்துவகுணம்:
இது பசியைத் தூண்டவும், குடல் வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. இது நம் உடலுக்குப் போதிய வெப்பத்தைத் தருவதோடு ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது.

பழுத்த மிளகாயில் வைட்டமின் சி சத்து உள்ளது. இம்மிளகாயை அளவுக்கு அதிகம் உண்டால் குடல் உறுப்புகள் கெடவும் வாய்ப்பு உண்டு.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..



No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.