சம்பங்கி

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்பார்கள். அதன் வாசனையே முகவரியை முத்தாய்ப்பாய்த் தெரிவிக்கும் என்பது அதன் பொருள். ஆனால், வாழ்வே வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில் மலர்களுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. விளம்பரங்களுக்கும் மலர்கள் தேவைப்படுகின்றன. பல்வேறு அலங்காரங்கள், மாலைகள், பூங்கொத்துகளில் பயன்பட்டு, நல்ல லாபமும் தரும் பாலியாந்தீஸ் டியூப்ரோஸா என்ற தாவரவியல் பெயர் கொண்ட சம்பங்கி மலர் சாகுபடி முறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும்.மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

விதை
இதன் விதைகள் கிழங்கு ரகத்தை சேர்ந்தது. 25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை.

வீரிய சம்பங்கி:
விதை கிழங்கு பெரியது. பூக்கள் பெரியது. பூ எடை அதிகம். பூ மொட்டு பெரியது. கிளைக்கும் தன்மை அதிகம். நீண்டநாள் சாகுபடி. மகசூல் அதிகம்.

நாட்டு சம்பங்கி:
விதை கிழங்கு சிறியது. பூக்கள் சிறியது. எடை குறைவு. பூ மொட்டு சிறியது. கிளைக்கும் தன்மை குறைவு. குறைவு நாட்கள். மகசூல் சுமார். பூக்களின் எண்ணிக்கை குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

நடும் முறை
இது பார்பதற்கு நாணல் மாதரி ஒரே குச்சி போன்று வளரக்கூடியது.

இதற்க்கு பெரிய தொட்டி எல்லாம் தேவை இல்லை. இரண்டு லிட்டர் வாட்டர் கேன் பாதியாக வெட்டி, அதில் மண்ணை நிரப்பி தயார் செய்தாலே போதும் இதற்க்கு தொட்டி சரியனதகிடும்.

ஒரு குத்திற்கு 6 கிழங்குகள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்

இரண்டரை செ.மீ.ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.

உங்கள் மாடியிலோ அல்லது தோட்டத்தில் சுட்று சுவர் ஓரங்களில் வரிசையாக  இந்த தொட்டிகள் வைத்தல், பூ வைக்கும் தருணங்களில் அருமையாக இருக்கும்.

பயிர் இடைவெளி
2 குத்திற்கும் இடையே உள்ள பயிர் இடைவெளி 4 விரல்கடை

சம்மந்கியில் நீர் நிர்வாகம்
கரிசல் மண்ணாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.  செம்மண்ணாக இருந்தால் வாரம் 3 தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

இதற்க்கு நடுவிலே அரளி, சாமந்தி, போன்ற வெவேறு வண்ணங்களில் உங்கள் கற்பனையில் தொட்டிகளை வைக்கலாம்.

உரநிர்வாகம்
மாத்திற்கு ஒரு முறை ஆட்டு எரு, கடலை புண்ணாக்கு வைக்க வேண்டும்.  இப்படிச் செய்தால் தொடர்ந்து பூ வந்து கொண்டே இருக்கும். 

முக்கிய குறிப்பு

கிழங்கு நடுவதற்கு தேர்வு செய்யும்போது செடி நட்டு 4 வருடம் ஆன தாய் செடியில் இருந்துதான் கிழங்;கு தேர்வு செய்ய வேண்டும்.கிழங்கை நெருக்கி நட்டால் கோரை கட்டுப்படும்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.