கோழிகொண்டை

கோழிகொண்டை
பெயரிலேயே பூ வின் வடிவத்தை கொண்ட மலர். மாலை கட்ட பயன்படும். மாடி தோட்டத்தில் அழகுக்காக வளர்ப்பார்கள்.
விதை போட்டு செடி உருவாக்கலாம். இதன் விதை பூவின் நடுவில் இருக்கும்.

விதை உருவம், எள்ளு மாதரி சிறிய அளவில் கருமையுடன் பாளபல என்று இருக்கும்.
குழி தட்டில் நாற்று விட்டும் நடலாம்.


ரகம்
ரோஸ், டார்க் சிவப்பு. 

பட்டம்
வருடம் முழுவதும் நடவு செய்யலாம்.

பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 2 அடி செடிக்கு செடி ஒரு அடி  

நீர் நிர்வாகம்
கரிசல்மண்ணாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண்ணாக இருந்தால் வாரம் 2 தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

அறுவடைத்தொழில்நுட்பம்
நாற்று செய்த  90ஆம் நாள் பூ பூக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை பூக்களை  அறுவடை செய்ய வேண்டும்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.