தக்காளி

தக்காளி:
நன்கு பழுத்த தக்காளி, கொழ கொழ வென இருக்கும் தக்காளி, அல்லது காய்கறி கடைகளில் ஓரமாய் எடுத்து வைத்து இருப்பார்கள், இவற்றில் எது கிடைக்குதோ எடுத்துப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும். விதைகள் தனியே பிரியும்.

பின்பு இந்நீரை வடிகட்டியால் எடுத்துவிட்டு, விதையில் சிறிது மண் அல்லது சாம்பல் உடன் சேர்த்து கலந்து ஒரு தாளில் காயவைத்துவிட வேண்டும். இப்போது தக்காளிச்செடி விதை தயார். இந்த விதைகள் நன்கு காய்ந்ததும் வீட்டில் உள்ள செம்மண் நிரம்பிய தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டுத் தூவி தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் காய்ந்து போகாத அளவிற்கு நீரை ஊற்றினால் போதுமானது.

அழுகிய தக்காளி பழத்தை தூக்கி போட்டால், அது ஒரே இடத்தில கொத்தாய் செடி முளைக்க ஆரம்பிக்கும்.அதை பிரிப்பது சிரம்மம்.இதை தவிர்க்க மேல சொன்ன முறையை பின்பட்றலாம்.

மேலும் ஒரு முறை, தக்காளியை அரை இன்ச் அளவுக்கு அறுத்து.தொட்டியில் அப்படியே மண்ணை பறித்து நடலாம். இந்த நடும் முறையை கீழே உள்ள  படத்தை பார்க்கவும்.

ஒட்டு விதைகள் விலை அதிகமாக இருப்பதால் குழித்தட்டு நாற்றங்கால்  முறையை கையாளலாம். தேவையான குழித்தட்டுகளை வாங்கி மண்புழு உரம் அல்லது  மக்க வைத்த தென்னைநார் கழிவு போட்டு விதையை முளைக்க வைத்து நடவு செய்யலாம். 

நீர் நிர்வாகம்
 நட்ட மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் பிறகு 5 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்ச வேண்டும். மிகவும் ஈரமாக இருக்கும் போது தண்ணீர் பாய்ச்சினால் வேர் அழுகிட வாய்ப்பு உள்ளது. 

நுண்ணுரம்
காய்கறி நுண்ணுரத்தை, மணலுடன் 1:4 வீதம் கலந்து  நட்ட ஒரு வாரத்திற்குள் தூவ வேண்டும்.

வளர்ச்சிஊக்கிகள்
பயிர் நடவில் இருந்து 35ம் நாள், 50ம் நாள் மாலை வேளையில்  வளர்ச்சி ஊக்கி ஏதாவது ஒன்றை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

வெள்ளை தாக்குதல்
வெள்ளை நிற சிறிய பூச்சிகள் செடிகளில் இலைகளின் பின்புறம் காணப்படும்.  இது செடிகளில் உள்ள சாறினை உறிஞ்சுவதால் செடிகள் வெளுத்து காணப்படும். 
  
கட்டுப்படுத்தும் முறை 
தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும்.மஞ்சள் தகடு  / ஒட்டு பொறி செடிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வைத்து கட்டுப்படுத்தலாம்.  

கட்டுப்படுத்தும் முறை 
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டையை தக்காளி பூ பூக்கும் பருவத்தில் 15 நாள் இடைவெளியில் பயன்படுத்தி இப்புழுக்களை  முட்டை பருவத்தில் கட்டுப்படுத்தலாம். ஆண் அந்துப்பூச்சியை அழிக்க இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கரில் 6 இடங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம் விளக்குப் பொறி வைத்து  அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். 

பின்பு  25 நாட்களுக்குள் தக்காளி காய்க்கத் தொடங்கி விடும். தக்காளி காய்ப்பதால் இச்செடியின் கனம் தாங்காமல் ஒடியக் கூடும். அதனால் இதன் அருகே ஒரு சிறிய கம்பை ஊன்றி விட வேண்டும். இதன் காய் காய்க்கும் சமயத்தில் இக்காம்புடன் செடியைக் கட்டிவிட வேண்டும்.

இது வளர்ந்து  40 வது நாளில் தக்காளியைப் பறிக்கலாம். இது 45 செ.மீ வளரக் கூடியது. இதில் 8 முறை தக்காளியை பழுக்கப்பழுக்கப் பறிக்கலாம்.

முக்கிய குறிப்புகள்
வேர் அழுகல் பாதிக்காமல் இருக்க தண்ணீர் அதிகம் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.மழைகாலங்களில் பாத்தியில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஒற்றை வாய்க்கால் பாசன முறையை பின்பற்றலாம்.
மருத்துவகுணம்:
தக்காளி வயிற்றுப்புண்ணை ஆற்றும் சிறந்த உணவாகும். தவிர புற்றுநோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும். இது ரத்தத்தைச் சுரக்கும் ஆற்றல் கொண்டது. தவிர தக்காளி சூப் அருந்தினால் சருமம் மென்மையாகும். தக்காளியை தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை அதிகரிக்காமல் வைக்கும்.


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.