ரோஜா

ரோஜா
ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

ரோஜா மலரை விரும்பாத பெண்கள் எவருமே இல்லை எனலாம்.நமது மனம் கவர்ந்த இந்த ரோஜா மலர் வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமுள்ளது. ஆனால் அது பற்றிய வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை.

இதோ உங்களுக்குச் சில டிப்ஸ்: ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாம் பார்த்திருக்கின்றோம். நம் வீட்டிலும் இப்படிப் பூத்துக் குலுங்காதா என்று நம்மில் பலர் ஏங்குவதுமுண்டு. பொதுவாக ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் அழகுத் தாவரமாகவே வளர்க்கப்படுவதுண்டு. வீட்டு முற்றம் இல்லாதவர்கள் சட்டித் தாவரமாக இதனை வளர்ப்பர்.

எவ்வாறாயினும் ரோஜா செடியின் வேர்ப் பகுதி இறுக்கமாக இல்லாமல் இலேசாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. காற்றோட்டம் இருப்பது அவசியம். இந்த ரோஜா செடிகள் நன்கு நீரை உறிஞ்சும் மண்ணிலும், போதுமான சூரிய வெளிச்சத்திலும் வளரும்.

வீட்டில் காய்கறி, இலைக் கழிவுகள் என்பவற்றையே உரமாகப் பாவிக்கலாம்.

இவை தவிர கடலைப் புண்ணாக்கு, தண்ணீரில் ஊறவைத்து கரைத்து ஊற்றினால் பூக்கள் பெரிதாகப் பூக்கும் என்று கூறுவார்கள்.

அதே போன்று எறும்பு மற்றும் பூச்சித் தொல்லைகளைத் தவிர்க்க வேப்பம் புண்ணாக்கு (இதுவும் மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்) பெரிதும் உதவும் என்று கூறுவர்.

ரோஜா செடி செழிப்பாக வளர நீர்த் தேங்கி நிற்காமல் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. ஆண்டுக்கு ஒரு முறை செடியின் மூன்றில் ஒரு பகுதியை வெட்டி விடலாம்.


ரோஜாத் தோட்டத்தில் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் குப்பைகள் சேருவது தடுக்கப்படும்.

எளிமையான முறை:
   இதோ ரோஜா செடி எளிமையாக அதிகமான முறையில் நாடும் முறை. நீங்களும் தவறாமல் முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே. உங்கள் வீட்டிலும் பூத்து குலுங்கும்.
நன்கு வளர்ந்த ரோஜா கிளையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஒரு ஒரு அடி அளவுகளில் வெட்டி கொள்ளுங்கள்.

நீங்கள் வெட்டி வைத்த துண்டுகளில் ஒரு சில இலைகள் இருக்குமாறு வைத்துவிட்டு, மீதி இலைகளை நீக்கி விடவும் நண்பர்களே. இந்த இலைகள் ஒளிசேர்கையை பார்த்துகொள்ளும். இந்த இலை இருந்தால், தலைகீழாக நடுவதையும் தவிர்க்க உதவுகிறது.அனால் படத்தில் இலை முழுவதும் நீக்கி இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு இலை முழுவதும் நீக்கி விட்டு,தலை கீழாக நட்டு விட்டார்.
                                                         
உருளை கிழங்கில் சிறிது ஓட்டை போட்டு கொள்ள வேண்டும், பின்னர் அந்த செடி துண்டுகளை சொருகவும்.இப்பொழுது நடுவதற்கு தயாராகிவிட்டது. உருளைக்கிழங்கு ஈரபதத்தை வைத்து கொள்ளும்.செடி காய்ந்து விடாமல் பார்த்து கொள்ளும். அதுவே உரமாக மாறவிடும்.            

சிறிது பள்ளம் தோன்றி, தயாரான உருளைக்கிழங்கு வைத்து மணல் கொண்டு மூட வேண்டும்...பிறகு மண் போட்டு மேலே மூடவும்.

இரண்டு நாளுக்கு ஒரு தடவை சிறிது தண்ணீர் விடவும்.தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ளவும். வெயிலும் அதிகமாக இல்லாதவாறு பார்த்து கொள்ளவும்.

இலைகள் துளிர்விட்டு வரும் வரை, மதிய நேரங்களில் சாக்கு பை கொண்டு,மூடி வைக்கலாம்.    
படத்தை கிளிக் செய்து பார்க்கவும்,மேலும் விவரங்களுக்கு..    

ரோஜா பூங்கன்றுகள் மண்ணோடு சேர்த்துப் பைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி வந்து பூஞ்சாடிகளில் நட்டு விட்டால் மட்டும் போதாது, கூடியவரை அவற்றைப் பராமரித்துக் காக்கவும் வேண்டும்.

ரோஜாத் தொட்டியில் உள்ள ஒரு கிளையை மற்றொரு மண் நிரப்பிய தொட்டியில் ஊண்றி வைக்கவும். அது ஒரு சில வாரங்களில் வளர தொடங்கி விடும். அந்த தொட்டி நன்கு வளர்ந்தவுடன் முதல் தொட்டியில் உள்ள கிளையை வெட்டி விடலாம்.

அல்லது மேலே உள்ள நடும் முறையையும் பயன்படுத்தலாம்.

சில செடிகளில் கிளையை ஒடித்து வைத்தால் நன்கு வளரும்.
சில செடிகளில் பூக்கள் காய்ந்து விதை வரும். அதை தொட்டியில் மண் நிரப்பி போட்டாலும் நன்கு வளரும்.

பன்னீர் ரோஜா பூ
தொட்டிகளில் வளர்க்கலாம். பால்கனியில் வளர்க்கச் சிறந்த தேர்வு இது. பன்னீர் ரோஜாவைச் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. பன்னீர் ரோஜாக்கள் தற்போது வெளியில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அதில் அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் தெளித்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால், வீட்டில் வளர்ப்பது பெஸ்ட்.

பலன்கள்: 
பன்னீர் ரோஜாவை, வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்யும். வெந்நீரில் ரோஜா இதழ்களைப் போட்டுக் கொதிக்கவைக்கவும். ஆறிய பின், அந்த நீரைக்கொண்டு முகம் கழுவலாம். இதுவே, பன்னீர் (ரோஸ் வாட்டர்). சருமத்துக்கான சிறந்த டோனர்.

உரம்:
டீதூள், காய்கறி தோல், பழத்தோல், வெங்காயச் சருகு, முட்டை ஓடு இவற்றை நேரடியாக உரமாக பயன்படுத்தினால் பூஞ்சை ஏற்பட்டு செடி பட்டுப்போகும். எனவே அவற்றை மக்கட்செய்து உரமாக பயன்படுத்தலாம். செடியை சுற்றி மண்ணை கிளறிவிட்ட பின்பே உரம் இடவேண்டும். பின்னர் நன்றாக நீர் விடலாம்.

மண்புழு உரம் ரோஜாத் தோட்டத்தின் முக்கிய நண்பன். இது கோடை காலத்திலும் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

பிண்ணாக்கு ஊறவைத்து கரைத்து ஊற்றவும்.உங்கள் செடி அருமையாக பூத்து குலுங்கும்.

முக்கியமான விசயம் ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க அவற்றோடு நாம் பேசவேண்டும். செடிகளுக்கு ஆசையாய் முத்தமிட வேண்டும். கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும்.

ரோஜா செடிக்கான உரஅளவு
முதல் உரமாக 60ம் நாள் கடலை புண்ணாக்கு போட வேண்டும்,பின்னர் 40 நாளைக்கு ஒரு முறை கடலை புண்ணாக்கு 200 கிராம் போட வேண்டும்.

பூச்சித்தாக்குதல்
வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது.

10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது spray செய்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.

ரோஜா செடியின் இலைகளில் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெள்ளை நிறப்படலம் போன்று காணப்படும். இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். பூ மொட்டுகள் வளராமல் நின்றுவிடும்.


நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டால் போதும். நம் வீட்டுத் தோட்டத்திலும் சாடிகளிலும் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாமும் ஆசைதீர பார்க்கலாம்.

எங்கே கிளம்பி விட்டீர்கள்? ரோஜாக் கன்றுகள் வாங்கவா...?

மேலும் ரோஜா வகைகளுக்கு இந்த >>லிங்க் கிளிக்<< செய்து பார்க்கவும்


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்...

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.