சங்குப் பூ

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ப் பெயர் வந்தது.
இது கொடி வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும்.இது கூட்டிலைகளையுடைய ஏறு கொடி. சங்குப்பூ கொடியாக வளரும். இயலுபுடையது.
அழகுக்காக வீடுகளிலும்வளர்க்கப் படுகின்றது. தட்டையான, அவரை போன்று  காய்களையுடையது.ஒரு விதை போட்டல் போதும் நண்பர்களே. உங்கள் வேலி முழுவதும் பரவிடும். பிறகு காய்கள் காய்ந்து வெடித்து விதைகள் முளைக்கும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும் நண்பர்களே.
வெள்ளை,நீளம் மாற்றி மாற்றி நட்டால் கண்ணை கவரும்.எப்போதும் இலைகள் பச்சை பசேல் என்று இருக்கும்.
மரத்தில் இந்த கொடியை ஏற்றி விட்டால்,அடர்த்தியாக பரவ கூடியது இதன் கொடிகள், பறவைகள் கூடு கட்ட சிறந்த இடமாக அமையும் நண்பர்களே. அதிலும் பழ மரம் என்றால் நல்ல வசதியாக இருக்கும் பறவைகளுக்கு.
பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப் படுகின்றது. இது சிறந்த மருத்துவப் பயன் உடையது.காக்கண விதைகள் நறு மணம் உடையதாகவும் புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் கொல்லுதல், தாது வெப்பு அகற்றுதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.