Govt scheme


மாடித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.500 மதிப்புடைய விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் ரூ.300-க்கு வழங்கப்படும் என தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

நகர்ப்புறங்களில் தோட்டக் கலையை வளர்க்கும் நோக்கில் தமிழக அரசு கடந்த 2013-14-ம் ஆண்டில் சென்னையில் முதன் முறையாக மாடித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து நீங்களே செய்து பாருங்கள்என்ற திட்டம் சென்னையுடன் கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தோட்டக்கலை துறை இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தொடக்கத்தில் ரூ.1,350 மதிப்புடைய காய்கறி கிட்வழங்கப்பட்டது. பின்னர் அதன் விலை ரூ.500 ஆக குறைக்கப்பட்டது.இப்பொழுது 350 ரூபாய்க்கு தருகிறார்கள் என்று கேள்வி பட்டேன். இந்நிலையில், இத்திட்டம் மாடித் தோட்ட இயக்கம்என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு தளையிலும் தென்னை நார்க்கழிவு கட்டி, பாலித்தீன் பை, காய்கறி விதைகள், பாலித்தீன் விரிப்பு, உயிர் உரங்கள், உயிர் பூஞ்சணக்கொல்லி, இயற்கை வேம்பு பூச்சிக்கொல்லி என்று 13 விதமான பொருட்கள் இருக்கும். மண்ணை விட எடைகுறைந்த, அதேசமயம் நீர்ப்பிடிப்பு அதிகம் கொண்டது என்பதால் தான், தென்னை நார்க் கழிவை செடிகள் வளர்ப்பதற்கான ஊடகமாகக் கொடுக்கிறோம். செடிகளை வளர்க்க வழங்கும் பாலித்தீன் பைகள் எடை குறைந்த மற்றும் யு.வி.கதிர்களைத் தாங்கும் திறன்கொண்டதாக இருக்கும். காய்கறி விதைகளில் கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்த வரை, செடிஅவரை, முள்ளங்கி, சிறுகீரை, பாலக்கீரை மற்றும் கொத்தமல்லி ஆகிய விதைகள் மூன்று பருவங்களுக்கும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
இது குறித்து, தமிழக அரசு தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் கூறியதாவது: 20 Oct 2016

மாடித் தோட்டம் திட்டம் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தமிழகம் முழுவதும் விரைவில் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.500 மதிப்புடைய காய்கறி கிட்வழங்கப்படும். 40 சதவீத மானியத்துடன் இவை வழங்கப்படுவதால் பொதுமக்கள் ரூ.300 செலுத்தினால் போதும். இந்த கிட்டில் 2 கிலோ எடையுள்ள கேக் வடிவிலான தேங்காய் நார் கழிவுகள் 6 பைகள், கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட 10 வகையான காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பையி ரில்லம் (நுண்ணுயிர் உரம்), 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா உரம், தலா 100 கிராம் எடை கொண்ட சூடோமோனஸ், டிரைகோடெர்மா விரிடி உரங்கள், ஒரு கிலோ நீரில் கரையும் உரங்கள், 100 மில்லி வேம்பு பூச்சிக் கொல்லி, தொழில்நுட்பக் குறிப்புகள் அடங்கிய பிரசுரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். ஒருவருக்கு அதிகபட்சமாக 5 தளைகள் வரை வழங்கப்படும்.
மேலும், விருப்பமுள்ளவர்கள் 10 சதுர மீட்டர் பரப்பளவில் மாடியில் நிழல் வலைக் குடில் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும். இதன்படி, ரூ.7 ஆயிரத்து 100 மதிப்புள்ள இந்த நிழல்வலைக் குடில் ரூ.3 ஆயிரத்து 550-க்கு கிடைக்கும். இத் திட்டத்தின் கீழ் மானியம் பெற பொது மக்கள் தங்களது வீட்டின் சொத்துவரி நகல், வாடகைதாரர் ஒப்பந்த நகல், குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

-------இவ்வாறு அதிகாரி கூறினார்.

இந்த படத்தில் இருக்கும் பொருட்கள் உங்களுக்கு மானிய விலையில் கிடைக்கும் நண்பர்களே.
நகர்புற தோட்டக்கலை வளர்ச்சிமையம், சென்னை
"உயர் தொழில்நுட்ப தோட்டக்கலையின் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைகழக தகவல் மற்றும் பயிற்சி மையமாக" 2000 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதில் நகரத்தில் சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள், அரசுசாராஅமைப்பினர், வீட்டிலிருக்கும் பெண்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இம்மையம், 2011 ஆம் ஆண்டு "தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைகழக தகவல் மற்றும் பயிற்சி மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிகள்
வீட்டுக்காய்கறித்தோட்டம் அமைத்தல், வீட்டுக்கூரைத்தோட்டம், மலர்ஜோடித்தல், வீட்டினுள் அலங்காரத்தாவரம் வளர்ப்பு, பொன்சாய் வளர்ப்பு, மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பு, இயற்கை வேளாண்மையில் பழம் மற்றும் காய்கறி சாகுபடி, வாசனைத்திரவியங்கள் தயாரிப்பு, பழம் மற்றும் காய்கறி பதனப்படுத்துதல், காளான் சாகுபடி, மண்புழு உர உற்பத்தி, பால் பொருட்கள் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்காகப் பொதுமக்களுக்கு ரூபாய் 400ம்,சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 300ம், மாணவர்களுக்கு ரூபாய் 200ம் பயிற்சிக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

------------- wikipedia

மேலும் தகவலுக்கு, அவர்களை தொடர்பு கொள்ள கீழ்காணும் இணைய தளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.